குஜராத்தில் கூகுள் ஃபின்டெக் மையம் திறப்பதாக அறிவிப்பு

June 24, 2023

பிரதமர் மோடி- சுந்தர் பிச்சை சந்திப்பையடுத்து, குஜராத்தில் கூகுள் ஃபின்டெக் மையம் திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடியை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். […]

பிரதமர் மோடி- சுந்தர் பிச்சை சந்திப்பையடுத்து, குஜராத்தில் கூகுள் ஃபின்டெக் மையம் திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடியை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். பின்னர், இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக பிரதமரிடம் பகிர்ந்து கொண்டோம் என்றார். குஜராத்தின் கிப்ட் நகரில் எங்களின் உலகளாவிய ஃபின்டெக் (fintech) செயல்பாட்டு மையத்தை திறப்பதை நாங்கள் அறிவிக்கிறோம் என சுந்தர் பிச்சை கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu