கூகுள் பிளே ஸ்டோரில் ஏராளமான மோசடி கடன் செயலிகள் இருந்து வந்தன. இந்த நிலையில், கிட்டத்தட்ட 2500 கடன் செயலிகள் நீக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் செயல்படும் மோசடி கடன் செயலிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடந்த 2021 ஏப்ரல் முதல், 2022 ஜூலை வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 4000 கடன் செயலிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், கிட்டத்தட்ட 2500 மோசடி கடன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் தொடர்ந்து கடன் செயலிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.














