பார்ட் - சாட் ஜிபிடி செயலிக்கு போட்டியாக கூகுளின் புதிய சாட்பாட் அறிமுகம்

February 7, 2023

மைக்ரோசாப்ட் உந்துதலில் ஓபன் ஏஐ நிறுவனம் தயாரித்துள்ள சாட் ஜிபிடி என்ற செயலி, உரையாடல் முறையில் பணியாற்றுகிறது. அது போலவே, உரையாடல் முறையில் பணி செய்யும் செயற்கை நுண்ணறிவு சாட் பாட் ஒன்றை கூகுள் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு 'பார்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இது குறித்து தனது வலைப்பதிவில் கூறியுள்ளார். மேலும், 'பார்ட்' தற்போது பரிசோதனை கட்டத்தில் இருப்பதாகவும், வரும் வாரங்களில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் எனவும், தெரிவித்துள்ளார். சுந்தர் […]

மைக்ரோசாப்ட் உந்துதலில் ஓபன் ஏஐ நிறுவனம் தயாரித்துள்ள சாட் ஜிபிடி என்ற செயலி, உரையாடல் முறையில் பணியாற்றுகிறது. அது போலவே, உரையாடல் முறையில் பணி செய்யும் செயற்கை நுண்ணறிவு சாட் பாட் ஒன்றை கூகுள் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு 'பார்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இது குறித்து தனது வலைப்பதிவில் கூறியுள்ளார். மேலும், 'பார்ட்' தற்போது பரிசோதனை கட்டத்தில் இருப்பதாகவும், வரும் வாரங்களில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் எனவும், தெரிவித்துள்ளார்.

சுந்தர் பிச்சையின் வலைப்பதிவில், "கடந்த 2 வருடங்களுக்கு முன்னர், லேம்டா குறித்த அறிவிப்பை வெளியிட்டோம். தற்போது, லேம்டாவின் துணையுடன் 'பார்ட்' என்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாட் உருவாக்கப்பட்டுள்ளது. இது கலந்துரையாடல் முறையில் பணி செய்யும். மேலும், மிகக் கடுமையான தகவல்களைக் கூட, ஒரு குழந்தைக்கு புரிய வைக்கும் படி, எளிமையாக விவரிக்க முடியும் வகையில், 'பார்ட்' வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, 9 வயது குழந்தைக்கு, நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி குறித்த தகவல்களை புரிய வைக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu