கூகுள் இந்தியப் பிரிவில் 453 பேர் பணி நீக்கம்

February 17, 2023

கூகுள் நிறுவனம், தனது இந்திய பிரிவில் பணியாற்றி வந்த 453 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, மின்னஞ்சல் வாயிலாக பணியாளர்களுக்கு இந்த தகவலை தெரிவித்தார். மேலும், பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பின்னர், இந்த பணி நீக்கம் குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு முழு பொறுப்பை தானே ஏற்பதாக தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவரான சஞ்சய் […]

கூகுள் நிறுவனம், தனது இந்திய பிரிவில் பணியாற்றி வந்த 453 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, மின்னஞ்சல் வாயிலாக பணியாளர்களுக்கு இந்த தகவலை தெரிவித்தார். மேலும், பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பின்னர், இந்த பணி நீக்கம் குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு முழு பொறுப்பை தானே ஏற்பதாக தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவரான சஞ்சய் குப்தா பணி நீக்க மின்னஞ்சலை பணியாளர்களுக்கு அனுப்பி உள்ளார்.

கடந்த மாதம், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்பாபெட் ,12000 ஊழியர்களை நீக்க உள்ளதாக அறிவித்தது. எனவே, கூகுள் நிறுவனத்தின் தற்போதைய பணி நீக்கம், அதன் பகுதியாக செயல்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu