கூகுள் நிறுவனம் ஜெமினி என்ற பெயரில் செய்யறிவு தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு அறிமுகமான சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பங்கிற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வெளியிட்டு வருகின்றன. கூகுள் நிறுவனம் இதற்கு முன்னதாக வெளியிட்ட பார்ட் தொழில்நுட்பத்துக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள ஜெமினி மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, தற்போது பயன்பாட்டில் உள்ள சாட் ஜிபிடி 4 தொழில்நுட்பத்தை விட அதிக திறன் வாய்ந்தது என கூறப்படுகிறது. இதில், எழுத்து, புகைப்படம், காணொளி, ஆடியோ போன்ற அனைத்து வடிவிலான உரையாடல்களும் மேற்கொள்ள முடியும் என கூகுள் அறிவித்துள்ளது. ஜெமினி தொழில்நுட்பத்தில், காகிதத்தில் வரைவது, கைகளால் அசைவுகள் தெரிவிப்பது போன்றவை கூட புரிந்து கொள்ளப்பட்டு சரியான பதில்கள் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.