ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு சேமிப்பு திறனை மேம்படுத்தும் ஆட்டோ ஆர்கைவ் அம்சம் அறிமுகம் - கூகுள்

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, தங்கள் கைபேசியின் சேமிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் புதிய அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. ஆட்டோ ஆர்கைவ் என்ற புதிய அம்சத்தின் மூலம், பயன்பாட்டில் இல்லாத செயலிகளின் தரவுகள் தாமாகவே சேமிக்கப்படும். அதே நேரத்தில், கைப்பேசியின் சேமிப்பு அளவு பெரும்பாலும் காலியாக்கப்பட்டு, பயனர்களுக்கு அதிக சேமிப்பு திறன் கிடைக்கும். சேமிப்பு திறனுக்காக, பயன்படுத்தாத செயலிகளை பயனர்கள் அன்இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. “ஆட்டோ ஆர்கைவ் அம்சம் மூலம், செயலிகளின் தரவுகள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், தேவைப்படும் […]

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, தங்கள் கைபேசியின் சேமிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் புதிய அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. ஆட்டோ ஆர்கைவ் என்ற புதிய அம்சத்தின் மூலம், பயன்பாட்டில் இல்லாத செயலிகளின் தரவுகள் தாமாகவே சேமிக்கப்படும். அதே நேரத்தில், கைப்பேசியின் சேமிப்பு அளவு பெரும்பாலும் காலியாக்கப்பட்டு, பயனர்களுக்கு அதிக சேமிப்பு திறன் கிடைக்கும். சேமிப்பு திறனுக்காக, பயன்படுத்தாத செயலிகளை பயனர்கள் அன்இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

“ஆட்டோ ஆர்கைவ் அம்சம் மூலம், செயலிகளின் தரவுகள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், தேவைப்படும் நேரத்தில் மீண்டும் குறிப்பிட்ட செயலிகளை நிறுவி, நிறுத்திய இடத்திலிருந்து பயன்பாட்டை தொடர முடியும்” என கூகுள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்த புதிய அம்சம், ‘ஆப் டெவலப்பர்களுக்கு மட்டுமே’ கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu