நேற்று ‘மேட் பை கூகுள்’ நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், கூகுள் நிறுவனத்தின் புதுவரவு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில், கூகுள் பிக்சல் வாட்ச் 2 வெளியானது. இந்த கடிகாரத்தின் விலை இந்திய மதிப்பில் 39900 என அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கூகுள் பிக்சல் வாட்ச் 2 -ல் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, இதயத்துடிப்பை கணிப்பதில், தூக்கத்தின் தன்மையை கணிப்பதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மூன்று புதிய சென்சார்கள் இதில் உள்ளன. அவை, உடல் வெப்பநிலையை அறிவது, இதயத்துடிப்பை கண்காணிப்பது, மன அழுத்தத்தை கணிப்பது போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. சுமார் 24 மணி நேரத்திற்கு இந்த வாட்ச் -ன் பேட்டரி திறன் நீடித்து இருக்கும் என கூறப்பட்டுள்ளது.