கூகுள் நிறுவனத்தின் ஜெமினி செயலி இந்தியாவில் அறிமுகம்

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாதனமான ஜெமினி செயலி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 9 இந்திய மொழிகளில் ஜெமினி செயலியில் சேவைகள் வழங்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு சாதனத்துக்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் பார்ட் என்ற சாட் பாட்டை அறிமுகம் செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் இதற்கு ஜெமினி என பெயர் மாற்றப்பட்டது. தற்போது, ஜெமினி செயற்கை நுண்ணறிவு சாட் பாட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, […]

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாதனமான ஜெமினி செயலி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 9 இந்திய மொழிகளில் ஜெமினி செயலியில் சேவைகள் வழங்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு சாதனத்துக்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் பார்ட் என்ற சாட் பாட்டை அறிமுகம் செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் இதற்கு ஜெமினி என பெயர் மாற்றப்பட்டது. தற்போது, ஜெமினி செயற்கை நுண்ணறிவு சாட் பாட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, குஜராத்தி, பெங்காலி, ஹிந்தி ஆகிய 9 இந்திய மொழிகளில் ஜெமினி சேவை கிடைக்கிறது. அடுத்த 4 மாதங்களில் ஜெமினி சாட்பாட் தனித்த செயலி பயனர்களுக்கு வழங்கப்படும். ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் மூலம் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu