கூகுள் நிறுவனத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் பகுதியாக, முக்கிய அதிகாரிகள் பலர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
கலிபோர்னியாவில் இயங்கி வரும் கூகுள் நிறுவனத்தின் முக்கியமான பொறியியல் குழுவில் குறைந்தபட்சம் 50 பணி நீக்கங்கள் நிகழ்வதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கூகுள் நிறுவனத்தின் முக்கிய குழுவில் இருந்து 200 ஊழியர்கள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கான மாற்று ஊழியர்கள் பணியமர்த்தப்படலாம் என சி என் பி சி தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை, நிறுவனத்தின் சர்வதேச நடவடிக்கைகளை எளிமையாக்கும் பொருட்டு பல்வேறு சர்வதேச நகரங்களில் இருந்து பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.