கூகுள் மேப்ஸ் இந்தியா தளத்தில் புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கூகுள் மேப்ஸ் தளத்தில் லென்ஸ் மற்றும் அட்ரஸ் டிஸ்கிரிப்ஷன் அம்சங்கள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளன. அட்ரஸ் டிஸ்கிரிப்ஷன் அம்சத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தை தேடும் போது, அதற்கு அருகில் உள்ள முக்கியமான லேண்ட்மார்க் பகுதிகள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்படும். இதனால், தெரியாத இடத்திற்கு பயணிக்கும் போது கூடுதல் தகவல்களுடன் எளிமையாக செல்ல முடியும். அடுத்ததாக, லென்ஸ் அம்சத்தின் படி, கைபேசி கேமரா மூலம் கூகுள் மேப் தளத்தில் ஒருவர் நிற்கும் இடத்தை பதிவிட வேண்டும். அப்போது, அருகில் இருக்கும் உணவகங்கள், கடைகள் மற்றும் முக்கியமான பகுதிகள் போன்ற விவரங்கள் கொடுக்கப்படும். முதற்கட்டமாக, ஜனவரி மாதம் முதல் இந்தியாவின் 15 முக்கிய நகரங்களில் இந்த அம்சம் வெளியிடப்படுகிறது. ஆண்ட்ராய்டு கைபேசிகளில் மட்டுமே இது கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.