செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகள் தற்போது வெளிவர தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆபத்தை விளைவிக்க கூடியது என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. எனவே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள கூகுள், மைக்ரோசாப்ட், ஓபன் ஏஐ நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார்.
‘பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடுவதற்கு முன்னால், தங்களது செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகள் மிகவும் பாதுகாப்பானவை என்பதை தொழில்நுட்ப நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்’ என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை வகுக்க திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக விவாதிக்க, கூகுள், மைக்ரோசாப்ட், ஓபன் ஏஐ நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.