நாசாவுடன் இணைந்து, சூரிய குடும்பத்தின் முப்பரிமாண காட்சிகளை வழங்கும் கூகுள் நிறுவனம்

September 15, 2022

ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, விண்வெளி துறை சார்ந்த முப்பரிமாண காட்சிகளை ஆக்குமென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் வெளியிட கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக, நாசா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளது. அத்துடன், இரு நிறுவனங்களும் இணைந்து, நேரலையில், விண்வெளி சம்பந்தப்பட்ட கண்காட்சி ஒன்றையும் கூட்டாக ஒருங்கிணைத்துள்ளன. கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில், "கூகுளின் தேடுபொறியில், இனிமேல், சூரிய குடும்பத்தைச் சார்ந்த கோள்கள், நட்சத்திரங்கள், விண்கலங்கள், நிலவுகள் […]

ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, விண்வெளி துறை சார்ந்த முப்பரிமாண காட்சிகளை ஆக்குமென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் வெளியிட கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக, நாசா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளது. அத்துடன், இரு நிறுவனங்களும் இணைந்து, நேரலையில், விண்வெளி சம்பந்தப்பட்ட கண்காட்சி ஒன்றையும் கூட்டாக ஒருங்கிணைத்துள்ளன.

கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில், "கூகுளின் தேடுபொறியில், இனிமேல், சூரிய குடும்பத்தைச் சார்ந்த கோள்கள், நட்சத்திரங்கள், விண்கலங்கள், நிலவுகள் போன்றவற்றின் முப்பரிமாண காட்சிகளைக் காணலாம்" என்று கூறப்பட்டுள்ளது. சூரிய குடும்பம் தொடர்பான தலைப்புகளை கூகுள் தேடு பொறியில் தேடும்பொழுது, "முப்பரிமாணத்தில் காண" என்ற பொத்தானை அழுத்தினால், விண்கூறுகளை முப்பரிமாணத்தில் காண முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை, கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு உறுதி செய்துள்ளார்.

மேலும், கல்வி சார்ந்த தேடல்களுக்கும் முப்பரிமாண காட்சி அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அப்போலோ 11 விண்கலம் நிலவில் தரை இறங்கிய இடம், செவ்வாய் கிரகத்தில் உள்ள ரோவர் நிலையம், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, சர்வதேச விண்வெளி நிலையத்தின் உட்புறம் போன்றவற்றை முப்பரிமாணத்தில் காணும் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று 60க்கும் மேற்பட்ட விண்வெளி தொடர்பான காட்சிகளை முப்பரிமாணத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.அத்துடன், கணினிகள் மட்டுமல்லாது, கைபேசிகளிலும் இந்த அம்சம் கொடுக்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய நாசாவின் இணை நிர்வாகி கிரிஸ் பிரவுன், "இந்த முப்பரிமாண வசதி மூலம் மாணவர்களுக்கு எளிமையான முறையில் விண்வெளி தொடர்பான முழுமையான புரிதலை ஏற்படுத்த முடியும். மேலும், விண்வெளியைப் புதிய கண் கொண்டு பார்க்கும் வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்த முடியும்" என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu