கூகுள் நிறுவனம் தனது கிளவுட் சேமிப்பு சந்தாவில் சலுகைகளை அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில், கூகுள் கிளவுட் சேமிப்பு பரவலாக பயன்படுத்தப்படும் தரவுகள் சேமிப்பகமாக உள்ளது. இந்த நிலையில், கிளவுட் சேவையை விளம்பரப்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. கூகுள் ஒன் கிளவுட் சேவைக்கு மாதம் 130 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவே, ஒரு வருட சந்தா 1300 ரூபாயாக உள்ளது. தற்போது, இந்த கட்டணங்களை கூகுள் குறைத்துள்ளது. தற்போது, 3 மாதத்திற்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது தவிர, கூடுதல் சேமிப்பை பெறுவதற்கான கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. 200 ஜிபி 50 ரூபாய் மற்றும் 2 டிபி 160 ரூபாய் ஆகிய சலுகை விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த சலுகையால் பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளர்கள் பயன்பெற உள்ளனர்.