கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், 10000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு, இதுவரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொழில்நுட்பம் சார்ந்த பெரு நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வரிசையில், ஆல்பாபெட் நிறுவனமும் இணைந்துள்ளது. செயல்திறன் அடிப்படையில், திறமை குறைந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக இது அமையும் என தெரிவித்துள்ளது. இதற்காக, நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகள், செயல்திறன் அடிப்படையில் பணியாளர்களை மதிப்பீடு செய்து வருகின்றனர். திறமை குறைந்தவர்கள் வெளியேற்றப்படும் வேளையில், திறமையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில், மற்ற போட்டி நிறுவனங்களைக் காட்டிலும், ஆல்பாபெட் நிறுவனம் அதிக ஊதியம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.














