மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு கட்டணம் - கூகுள் பே அறிவிப்பு

December 11, 2023

டிஜிட்டல் கட்டண செயலிகளில் கூகுள் பே முன்னணியில் உள்ளது. இதுவரையில், இந்த தளம் மூலம் செய்யப்படும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது. இந்த நிலையில், தற்போது, மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு 3 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுக்கு கூகுள் பே கட்டணம் வசூலிக்க உள்ளது. ஏற்கனவே, பேடிஎம், போன் பே ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை தொடங்கிவிட்டன. அந்த வரிசையில், கூகுள் […]

டிஜிட்டல் கட்டண செயலிகளில் கூகுள் பே முன்னணியில் உள்ளது. இதுவரையில், இந்த தளம் மூலம் செய்யப்படும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது. இந்த நிலையில், தற்போது, மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு 3 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுக்கு கூகுள் பே கட்டணம் வசூலிக்க உள்ளது. ஏற்கனவே, பேடிஎம், போன் பே ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை தொடங்கிவிட்டன. அந்த வரிசையில், கூகுள் பே புதிதாக இணைந்துள்ளது. கூகுள் பே, வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 100 ரூபாய்க்கு உட்பட்ட ரீசார்ஜ்களுக்கு கட்டணங்கள் இல்லை. 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலான ரீசார்ஜ்களுக்கு 2 ரூபாய் கட்டணமும், 300 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் ரீசார்ஜ்களுக்கு 3 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu