வணிகர்களுக்கு கூகுள் பே சவுண்ட் பாட் வெளியீடு

February 26, 2024

யுபிஐ பரிவர்த்தனை சேவைகளை வழங்குவதில் கூகுள் பே இந்திய அளவில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் பரிசோதனை அடிப்படையில், சவுண்ட் பாட் கருவியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. தற்போது சிறிய வணிகர்களுக்கு இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது. கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி, கூகுள் பே நிறுவனத்தின் துணை வேந்தர் அம்பரிஷ் கெங்கே வலைப்பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், சிறிய வணிகர்களுக்கு சவுண்ட் பாட் ஆடியோ கருவி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் செலுத்திய கட்டணங்கள் […]

யுபிஐ பரிவர்த்தனை சேவைகளை வழங்குவதில் கூகுள் பே இந்திய அளவில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் பரிசோதனை அடிப்படையில், சவுண்ட் பாட் கருவியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. தற்போது சிறிய வணிகர்களுக்கு இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி, கூகுள் பே நிறுவனத்தின் துணை வேந்தர் அம்பரிஷ் கெங்கே வலைப்பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், சிறிய வணிகர்களுக்கு சவுண்ட் பாட் ஆடியோ கருவி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் செலுத்திய கட்டணங்கள் ஆடியோ மெசேஜ்களாக உடனுக்குடன் வணிகர்களுக்கு தெரிவிக்கப்படும். இதனால், வணிகர்களுக்கு மிக எளிமையான பண பரிவர்த்தனை உறுதி செய்யப்படும். ஏற்கனவே, பேடிஎம், போன் பே போன்ற இதர யுபிஐ தளங்கள் சவுண்ட் பாட் கருவிகளை செயல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu