கூகுள் பே -ல் ரூபே கிரெடிட் கார்டுகள் பேமெண்ட் தொடக்கம்

கூகுள் நிறுவனம், தேசிய கட்டண கழகத்துடன் இணைந்து, ரூபே கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஒப்பந்தம் போட்டிருந்தது. அதன்படி, தற்போது, கூகுள் பே கட்டண செயலியின் மூலம், பொதுமக்கள் ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக, யூபிஐ தளங்களில் ரூபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் அம்சம், பேடிஎம் மற்றும் போன் பே தளங்களில் வெளியானது. தற்போது மூன்றாவதாக, கூகுள் பே கட்டண செயலி இந்த வரிசையில் […]

கூகுள் நிறுவனம், தேசிய கட்டண கழகத்துடன் இணைந்து, ரூபே கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஒப்பந்தம் போட்டிருந்தது. அதன்படி, தற்போது, கூகுள் பே கட்டண செயலியின் மூலம், பொதுமக்கள் ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக, யூபிஐ தளங்களில் ரூபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் அம்சம், பேடிஎம் மற்றும் போன் பே தளங்களில் வெளியானது. தற்போது மூன்றாவதாக, கூகுள் பே கட்டண செயலி இந்த வரிசையில் இணைந்துள்ளது.

ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்தியன் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் இருந்து பெறப்பட்ட ரூபே கிரெடிட் கார்டுகளை கூகுள் பே தளத்தில் பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இதர வங்கிகளையும் விரைவில் இணைக்க உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu