கூகுள் தேடுபொறி மற்றும் தளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புகுத்தப்படும் - சுந்தர் பிச்சை அறிவிப்பு

May 11, 2023

கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், உலகில் மிகவும் பிரதானமாக பயன்படுத்தப்படும் கூகுள் தேடுபொறியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், கூகுளால் இயக்கப்படும் பிற தளங்களான கூகுள் போட்டோஸ், கூகுள் ஒர்க் ஸ்பேஸ் போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு […]

கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், உலகில் மிகவும் பிரதானமாக பயன்படுத்தப்படும் கூகுள் தேடுபொறியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், கூகுளால் இயக்கப்படும் பிற தளங்களான கூகுள் போட்டோஸ், கூகுள் ஒர்க் ஸ்பேஸ் போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாட் கருவியை வெளியிட்டது. இந்த சம்பவம், 16 வருடங்களுக்கு முன்னர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வெளிவந்த போது ஏற்படுத்திய தாக்கத்தை மீண்டும் ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, ஓபன் ஏஐ நிறுவனத்தை மைக்ரோசாப்ட் கையகப்படுத்தி, அதன் தேடுபொறியான பிங்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தியது. இதன் மூலம், கூகுள் தேடுபொறிக்கு கடும் அச்சுறுத்தல் நேர்ந்தது. தற்போது, செயற்கை நுண்ணறிவு போட்டியில் தன்னை முன்னிறுத்தும் விதமாக, தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு வரவுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இழந்த இடத்தை, கூகுள் மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu