கோவிட் - 19 பூட்டுதல் மற்றும் சீனாவில் நிலவும் பதட்டநிலை காரணமாக பிக்சல் போன்களின் தயாரிப்புகளை இந்தியாவிற்கு மாற்ற கூகுள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கூகுள் பிக்சல் வருடாந்திர உற்பத்தியில் 10-20 சதவீதத்தை அதிகமாக உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் நிலவிவ௫ம் பதட்டநிலை காரணமாக ௯குளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பிக்சல் தயாரிப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை பரிசீலித்ததாக கூறப்படுகிறது. இதற்காக ௯குளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 500,000 மற்றும் 1 மில்லியன் பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் தயாரிப்பதற்காக உற்பத்தியாளர்களுக்கு ஏல அறிவிப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில், ஆப்பிள் ஏற்கனவே ஒப்பந்த உற்பத்தி கூட்டாளர்களான ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் மூலம் இந்தியாவில் நான்கு மாடல்களை உருவாக்குகிறது. எனவே ஆல்பாபெட் வியட்நாமையும் ஒ௫ மாற்றுவழியாக கருதுகிறது. இ௫ப்பினும் இறுதி முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.