கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய அம்சங்கள் மற்றும் செயலிகளை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் வாட்ச் ஓ எஸ் ஸ்மார்ட் வாட்ச்களில் இந்த புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கூகுள் நிறுவனத்தின் வலைப்பதிவில், கூகுள் ஆண்ட்ராய்டு பிரிவு ப்ராடக்ட் மேனேஜ்மென்ட் இயக்குனர் அங்கனா கோஷ், இதனை தெரிவித்துள்ளார்.
முதலாவதாக, ஆப்பிளின் சபாரி போன்ற ரீடிங் மோடை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீடிங் மோட், பயனர்களுக்கு சிறந்த வாசிப்பு அனுபவத்தை தரும் எனவும், பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, டிஜிட்டல் கார் கீ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போனில் உள்ள டிஜிட்டல் வாலட் செயலி மூலம் கார்களின் லாக்கை கட்டுப்படுத்தும் வகையில் இது அமைத்துள்ளது. கூகுள் பிக்சல் 6 மற்றும் ஆண்ட்ராய்டு 12 மற்றும் அதற்கு மேம்பட்ட ஸ்மார்ட் போன்களில் இந்த அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவை தவிர, தொலைக்காட்சியில் நேரடியாக ஸ்கிரீன் காஸ்ட் செய்யும் வசதி, கூகுள் போட்டோவில் ஸ்டைல்ஸ் அம்சம், புதிய எமோஜி, யூடியூப் ஹோம் ஸ்கிரீன் விட்ஜெட் போன்ற பல அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.