பாஸ்வேர்டு க்கு மாற்றாக 'பாஸ் கீ' - கூகுள் புதிய அறிமுகம்

இன்று உலக பாஸ்வேர்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. டிஜிட்டல் உலகில், அனைத்து தளங்களிலும் சேவைகளைப் பெற பல்வேறு பாஸ்வேர்ட்களை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். எளிதில் நினைவில் கொள்ளத்தக்க எளிய பாஸ்வேர்டுகளை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் குறைவு. எனவே, பாஸ்வேர்டுக்கு மாற்றாக 'பாஸ் கீ' அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இது பயனர்களுக்கு அதிக பாதுகாப்பை உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் கைப்பேசியில், கைரேகை, முக அங்கீகாரம், ஸ்கிரீன் லாக் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். […]

இன்று உலக பாஸ்வேர்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. டிஜிட்டல் உலகில், அனைத்து தளங்களிலும் சேவைகளைப் பெற பல்வேறு பாஸ்வேர்ட்களை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். எளிதில் நினைவில் கொள்ளத்தக்க எளிய பாஸ்வேர்டுகளை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் குறைவு. எனவே, பாஸ்வேர்டுக்கு மாற்றாக 'பாஸ் கீ' அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இது பயனர்களுக்கு அதிக பாதுகாப்பை உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் கைப்பேசியில், கைரேகை, முக அங்கீகாரம், ஸ்கிரீன் லாக் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அது போலவே, 'பாஸ் கீ' செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது அதிக பாதுகாப்பு அம்சத்தை கொண்டிருப்பதால், பாஸ்வேர்ட்களை மறந்து விடுவோம் என்ற அச்சத்தை பொதுமக்கள் நீக்கிக் கொள்ளலாம் என கூகுள் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில், கூகுள் கணக்குகளில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் 'பாஸ் கீ' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுடன் இணைந்து, பிற தளங்களில் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu