செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பல்வேறு துறைகளில் தினந்தோறும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது பத்திரிக்கை துறைகளிலும் இது பயன்பாட்டிற்கு வர உள்ளது.
பத்திரிக்கை துறையில் புதிய முயற்சியாக கூகுள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளை பரிசோதனை செய்து வருகின்றது. இதன் மூலம் பத்திரிக்கை துறை, பதிப்பகத்துறை போன்றவற்றில் கட்டுரை மற்றும் செய்திகளை எழுதும் பணிகளை இக்கருவிகளை பயன்படுத்தி விரைவாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க முடியும். மேலும் கட்டுரைகளை உருவாக்குவதிலும் உண்மை சரிபார்ப்பிலும் பத்திரிகையாளர்களின் பணிகளுக்கு மாற்றாக இது அமையாது. அவர்களின் வேலைக்கு எந்த வகையான பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.
இக்கருவியின் மூலம் பத்திரிக்கையாளர்கள் தங்களின் படைப்புகளுக்கு ஏற்ற எழுத்து வடிவம் மற்றும் எண்ணற்ற புதிய படிப்புகளை தேர்ந்தெடுத்து விரைவாக அவர்கள் பணியை செய்து கொள்ள முடியும்.
இதற்காக கூகுள் நிறுவனம் வாஷிங்டன் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.














