கூகுள் நிறுவனத்திற்கு 4.12 பில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

September 14, 2022

ஐரோப்பாவின் நீதிமன்றம், கூகுள் நிறுவனத்திற்கு 4.12 பில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது கூகுள் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப உலகில் தனக்கு இருக்கும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக கூகுள் நிறுவனத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தைப் பயன்படுத்தி, இணைய வர்த்தகங்கள் மற்றும் இணையத் தேடலை நிகழ்த்தியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், கூகுள் தரப்பு, இலவசமான இந்த இயங்குதளத்தை, மற்ற பெரு நிறுவனங்களைப் […]

ஐரோப்பாவின் நீதிமன்றம், கூகுள் நிறுவனத்திற்கு 4.12 பில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது கூகுள் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப உலகில் தனக்கு இருக்கும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக கூகுள் நிறுவனத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தைப் பயன்படுத்தி, இணைய வர்த்தகங்கள் மற்றும் இணையத் தேடலை நிகழ்த்தியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், கூகுள் தரப்பு, இலவசமான இந்த இயங்குதளத்தை, மற்ற பெரு நிறுவனங்களைப் போலவே பயன்படுத்தியதாகக் கூறியது. இந்த வழக்கு ஐரோப்பிய நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஆண்ட்ராய்டு கைபேசிகள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள் மீது சட்ட விரோத கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளைப் புகுத்தி, தொடர்ந்து முதன்மை தேடு பொறியாக நீடிக்க, கூகுள் நிறுவனம் செயலாற்றுவதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இதற்காக, 4.12 பில்லியன் யூரோக்கள் அபராதமும் விதித்துள்ளது. எனினும், கூகுள் மீதான குற்றத்தில் சில நிரூபிக்கப்படாததால் அபராதத் தொகையில் 5% விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த வருடத்தில், கூகுள் மீது தொடரப்பட்ட மூன்று வெவ்வேறு வழக்குகளில், சுமார் 2.42 பில்லியன் யூரோக்களை கூகுள் அபராதமாக செலுத்தியுள்ளது. அத்துடன், இந்த வழக்கில் வென்ற ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த மார்க்கரட் வஸ்தேகர், குவால்கம், இன்டெல் போன்ற பெரு நிறுவனங்களின் வழக்குகளிலும் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu