கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஜெமினி ஆகும் இது துல்லியமான தகவல்களை தெரிவிக்காததாக அண்மையில் சர்ச்சை எழுந்துள்ளது. இதன் விளைவாக, கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் கடும் இழப்பை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 4.5% பங்குகள் சரிந்துள்ளன. நேற்றைய நிலவரப்படி, கிட்டத்தட்ட 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஆல்பாபெட் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆல்பாபெட் நிறுவனத்தை பொறுத்தவரை, கடந்த வருடத்தில் ஒரே நாளில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய வீழ்ச்சியாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தில் கூகுள் நிறுவனத்தின் ஜெமினி செயல்படுகிறது. இந்த சாட் பாட் கருவியில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு சரியான பதில் வழங்கவில்லை. அத்துடன், வார்த்தைகளாக கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப சரியான புகைப்படங்கள் வடிவமைக்கப்படவில்லை. இந்த செய்திகளின் விளைவாக ஆல்பாபெட் வீழ்ச்சி அடைந்துள்ளது.