கூகுளின் புதிய பிக்சல் ஸ்மார்ட் வாட்ச்

April 27, 2022

வாஷிங்டன், ஏப்ரல் 27, 2022: கூகுள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்துவதாகக் கூறப்படும் பிக்சல் ஸ்மார்ட் வாட்ச், சமீப காலமாக செய்திகளில் இடம் பெற்று வருகிறது.

வாஷிங்டன், ஏப்ரல் 27, 2022:
கூகுள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்துவதாகக் கூறப்படும் பிக்சல் ஸ்மார்ட் வாட்ச், சமீப காலமாக செய்திகளில் இடம் பெற்று வருகிறது. இந்நிலையில் அதன் வடிவமைப்பு அமெரிக்காவின் உணவகம் ஒன்றில் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 9to5Google ல் கிடைத்த தகவலின் படி, செவ்வாய்கிழமையன்று கூகுள், பிக்சல் ஸ்மார்ட் வாட்ச்கான டிரேட்மார்க்கைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. டிரேட்மார்க் செயலி இணையத்தில் கிடைத்தாலும், அதில் விரிவானத் தகவல்கள் கிடைக்கவில்லை. எனினும், கூகுளின் புதிய அப்டேட்டுக்கான code ஐ ஆராய்ந்ததில், தற்போது பெரும்பாலும் புழக்கத்தில் இருக்கும் OS-3 ஸ்மார்ட் ஸ்மார்ட் வாட்ச்களில் உள்ள ஸ்னாப்ட்ராகன் மாடலுக்குப் பதிலாக, இதில் Exynos chipset இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இது சாம்சங் கேலக்ஸி வாட்ச்களுக்கான மாற்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர I/O நிகழ்வு வரும் மே 11ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அப்போது பிக்சல் ஸ்மார்ட் வாட்ச்சின் அறிமுகமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu