பயோ எரிபொருள் ஏற்றுமதி விதிகளில் மாற்றம்

March 23, 2023

எத்தில் ஆல்கஹால், பெட்ரோலியம் ஆயில், பிட்டுமினஸ் பொருட்களில் இருந்து பெறப்படும் எண்ணெய், பயோடீசல் மற்றும் அதன் கலவைகள் ஆகியவை பயோ எரிபொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், பயோ எரிபொருட்களுக்கான ஏற்றுமதி விதிகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பயோ எரிபொருட்களை, எரிபொருள் மற்றும் எரிபொருள் அல்லாத தேவைகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இறக்குமதி […]

எத்தில் ஆல்கஹால், பெட்ரோலியம் ஆயில், பிட்டுமினஸ் பொருட்களில் இருந்து பெறப்படும் எண்ணெய், பயோடீசல் மற்றும் அதன் கலவைகள் ஆகியவை பயோ எரிபொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், பயோ எரிபொருட்களுக்கான ஏற்றுமதி விதிகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பயோ எரிபொருட்களை, எரிபொருள் மற்றும் எரிபொருள் அல்லாத தேவைகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் தயார் செய்யப்படும் பயோ எரிபொருட்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். - இவ்வாறு மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. மேலும், ஏற்றுமதிக்காக மட்டுமே தயார் செய்யப்படும் பயோ எரிபொருட்களுக்கும் இந்த விதி பொருந்தும் என கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu