இந்தியா வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதை தடை செய்துள்ளது. இந்த நிலையில், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 75000 டன் அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.உணவு நெருக்கடியை எதிர்கொள்ள, அரிசியை கோரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே அரிசி ஏற்றுமதி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, அமீரகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதத்தில், பூட்டான், சிங்கப்பூர், மொரீசியஸ் ஆகிய நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத அரசு ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் அமீரகம் தற்போது இணைந்துள்ளது.