இந்தியாவில் காற்றாலை மின்சார திட்டங்களுக்கு 7453 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று கூடிய மத்திய அமைச்சரவை, இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காற்றாலை மின்சார கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு 6853 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டங்களுக்கான துறைமுக மற்றும் போக்குவரத்து செலவுகளுக்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.- இந்த தகவல்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.