அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 15ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம்

February 8, 2024

தமிழ்நாடு அரசில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு […]

தமிழ்நாடு அரசில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் போராட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன் செல்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. அதன்படி வருகிற 15ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 26 ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu