விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு
அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதற்கிடையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சில சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிமுறைகளை அறிவித்துள்ளது. களிமண் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட சிலைகள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக், தெர்மாக்கோல் மற்றும் நச்சு கலந்த வண்ணப்பூச்சுகளைத் தவிர்க்க வேண்டும். சிலைகளை அலங்கரிக்க மரங்களின் இயற்கை பிசின்கள் மற்றும் வைக்கோல் பயன்படுத்தவும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கரைக்கவேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிக்காமல் விழாவை கொண்டாடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.