குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று ரேகைகளை பெறலாம் - தமிழக அரசு உத்தரவு

February 12, 2024

‘தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் உறுப்பினர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் நேரடியாக கடைக்கு வர வேண்டியதில்லை; மாறாக குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஊழியர்கள் கைரேகைகளை பெறலாம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தமிழக அரசின் உத்தரவு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஆணையர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைவரும் கைவிரல் ரேகையை உடனடியாக பதிவு செய்யாவிட்டால், அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படும் என […]

‘தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் உறுப்பினர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் நேரடியாக கடைக்கு வர வேண்டியதில்லை; மாறாக குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஊழியர்கள் கைரேகைகளை பெறலாம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தமிழக அரசின் உத்தரவு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஆணையர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைவரும் கைவிரல் ரேகையை உடனடியாக பதிவு செய்யாவிட்டால், அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படும் என நியாய விலைக் கடை ஊழியர்கள் தெரிவித்ததாக, பொதுமக்கள் புகார் கூறினர். இதையடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படாது என தெளிவுபடுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu