மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடபட்டுள்ளது.
தமிழகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். உலகெங்கும் தொழில்முனைவோர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் பணியில், அவர் துபாய் மற்றும் சிங்கப்பூர் பயணங்களை மேற்கொண்டார். சமீபத்தில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த மாநாட்டில், 6 முக்கிய தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், தமிழ்நாட்டில் 4,100 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களுடன் எப்போதும், செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.