அடுத்த வருடத்திற்கான அரசு பொது விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழக அரசு வரும் 2024 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 24 நாட்கள் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ் வருடபிறப்பு, மகாவீர் ஜெயந்தி ஆகியவை கொண்டாட படுகிறது. ஐந்து விடுமுறை திங்கட்கிழமைகளிலும், மூன்று விடுமுறை வெள்ளிக்கிழமைகளிலும் வருகின்றன. மேலும் ஜனவரியில் மட்டும் ஆறு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் தீபாவளி அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாட பட உள்ளது.