மத்திய அரசின் விளம்பரச் செலவுகள் மட்டுமே 408.46 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்பி ஏ ஏ ரஹீம் கேட்டிருந்த கேள்விக்கு, ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த பதிலில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2022 முதல் 2023 ஆம் ஆண்டுகளில், மத்திய அரசு, விளம்பரத்துக்காக 408.46 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. அவற்றில், அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் மற்றும் வெளி விளம்பரம் ஆகிய அனைத்து பிரிவுகளும் அடங்கும். அச்சு ஊடகத்தில் 220.34 கோடி, மின்னணு ஊடகத்தில் 155.27 கோடி மற்றும் வெளிப்புற விளம்பரங்களுக்கு 32.85 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் விளம்பரச் செலவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், இந்த செலவுகள் சென்ட்ரல் பீரோ ஆஃப் கம்யூனிகேஷன் ஆல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .














