ஆங்கிலக் கால்வாய் வழியாக ஐரோப்பாவில் இருந்து சிறிய படகுகளில் வரும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க அரசு இந்த வாரம் புதிய சட்டத்தை இயற்ற உள்ளது என ரிஷி சுனக் கூறியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியில், சட்டவிரோதமாக இங்கு வரலாம் என தவறு செய்யாதீர்கள், இங்கு வந்தால் தங்க முடியாது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் புகலிடம் கோர அனுமதிக்க மாட்டோம். அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். ஆங்கிலக் கால்வாய் வழியாக ஐரோப்பாவில் இருந்து சிறிய படகுகளில் வரும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க அரசு இந்த வாரம் புதிய சட்டத்தை இயற்ற உள்ளது. எனது 5 முக்கிய பணிகளில் ஒன்றாக இது இருக்கிறது. இவ்வாறு ரிஷி சுனக் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.














