சீனாவுக்கு, அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கா அரசு எச்சரித்துள்ளது.
சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கா வெளியுறவுத்துறை பயண ஆலோசனை வெளியிட்டுள்ளது. அதில் தவறான தடுப்பு காவலில் வைக்கப்படும் அபாயம் இருப்பதால் அமெரிக்கர்கள் சீனாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் சீன பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டு மக்களை அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.