பல்கலைக்கழக திருத்த மசோதா மற்றும் பொது கட்டிட உரிமை திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதா மற்றும் பொது கட்டிட உரிமை திருத்த மசோதாவை மாநில அரசு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இதையடுத்து, சில வாரங்களாக நிலுவையில் இருந்த இந்த மசோதாக்களுக்கு, ஏப்ரல் 8 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் “மசோதாக்களை ஒப்புதல் இன்றி காலதாமதம் செய்வது சட்டவிரோதம்” எனத் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் அடுத்த நாள் கவர்னர் ஆர்.என். ரவி இரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது.