இந்திய அரசாங்கம் 2025ஆம் ஆண்டு லேப்டாப் மற்றும் டேப்லெட் கணினிகளை இறக்குமதி செய்வதில் புதிய நெகிழ்வான கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி, இந்த பொருட்களை ஆண்டு முழுவதும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் சந்தையில் லேப்டாப் மற்றும் டேப்லெட் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய கொள்கையின் முக்கிய நோக்கம், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அனைத்து பிராண்டுகளும் இந்தியாவிலேயே லேப்டாப் மற்றும் டேப்லெட் கணினிகளை உற்பத்தி செய்யும் வகையில் ஊக்குவிப்பதாகும். இதற்காக, ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு 5 சதவீதம் குறைக்கப்படும். ஆனால், தேவை அதிகமாக இருப்பின் கூடுதல் அளவு இறக்குமதி செய்யவும், தேவை குறைவாக இருப்பின் உள்ளூர் உற்பத்தி இலக்கை சரிசெய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு இரண்டு முறை மதிப்பாய்வு செய்யப்படும்.