மின் வாரியத்திற்கு ரூ.4,000 கோடி கூடுதல் மானியம் தர அரசு ஒப்புதல்

September 15, 2022

மின் வாரியத்திற்கு கூடுதலாக 4,000 கோடி ரூபாய் மானியம் விடுவிக்க, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக மின் வாரியத்தின், சென்னை வடக்கு மண்டல மின் வினியோகம் தொடர்பாக, சென்னை, மாதவரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி, வாரிய அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது பேசிய அவர் மின் வாரியம், 1.59 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு, ஆண்டுக்கு, 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வட்டி செலுத்துகிறது. தமிழகத்தில், மற்ற மாநிலங்களை விட குறைந்த அளவுக்கு தான் […]

மின் வாரியத்திற்கு கூடுதலாக 4,000 கோடி ரூபாய் மானியம் விடுவிக்க, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக மின் வாரியத்தின், சென்னை வடக்கு மண்டல மின் வினியோகம் தொடர்பாக, சென்னை, மாதவரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி, வாரிய அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது பேசிய அவர் மின் வாரியம், 1.59 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு, ஆண்டுக்கு, 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வட்டி செலுத்துகிறது. தமிழகத்தில், மற்ற மாநிலங்களை விட குறைந்த அளவுக்கு தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில், தமிழகத்தில் தான் மிக குறைவாக மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, கடந்த ஆண்டு மின் வாரியத்திற்கு, 9,000 கோடி ரூபாய் மானியம் வழங்கியது. மின் கட்டணம் உயர்த்திய நிலையில் தற்போது கூடுதலாக 4,000 கோடி ரூபாய் மானியம் விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.


0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu