சீனா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 232 செயலிகளுக்கு இந்தியாவில் தடை

February 6, 2023

சூதாட்டம் மற்றும் கடன் வழங்கல் தொடர்பான 232 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. இதில் பெரும்பாலானவை சீன செயலிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதர நாட்டு செயலிகளும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்திய அரசு தடை செய்துள்ள செயலிகளில், 138 செயலிகள் சூதாட்டம் சம்பந்தப்பட்டவை. மேலும், 94 செயலிகள் கடன் வழங்கல் தொடர்பானவை. இந்த செயலிகள் மீது நிதி முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவசரக் கால அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளன. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் […]

சூதாட்டம் மற்றும் கடன் வழங்கல் தொடர்பான 232 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. இதில் பெரும்பாலானவை சீன செயலிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதர நாட்டு செயலிகளும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்திய அரசு தடை செய்துள்ள செயலிகளில், 138 செயலிகள் சூதாட்டம் சம்பந்தப்பட்டவை. மேலும், 94 செயலிகள் கடன் வழங்கல் தொடர்பானவை. இந்த செயலிகள் மீது நிதி முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவசரக் கால அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளன. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது. மேலும், இந்த செயலிகள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவையாக தெரிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, சீன செயலிகளின் நிதி முறைகேடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிலையில், தற்போது பெரும்பாலானவை உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu