இந்தியாவில் அதிக பொறியியல் கல்லூரிகள் உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு, அனைத்து பொறியாளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அவர் ட்விட்டரில் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், நமது நாட்டில் திறமையான பொறியாளர்கள் பலர் உள்ளனர். நாட்டை கட்டமைப்பதில் அவர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றனர். பொறியியல் கல்லூரிகள் மற்றும் பொறியில் படிப்புக்கான கட்டமைப்புகளை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
பொறியாளர்கள் தினத்தில் விஸ்வேஸ்வரய்யாவின் அளப்பரிய பங்களிப்பை நாடு நினைவு கூர்கிறது. வருங்கால பொறியாளர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள அவரது பங்களிப்பு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.














