கைப்பேசி தயாரிப்புக்கு தேவைப்படும் உபகரணங்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கைப்பேசி தயாரிப்புக்கு தேவைப்படும் உபகரணங்கள் மீதான இறக்குமதி வரி 15% ஆக இருந்தது. இது தற்போது 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பேட்டரி கவர்கள், கேமரா லென்ஸ், கைபேசி பேக் கவர், ஆண்டனா போன்ற உதிரி பாகங்கள், சிம் கார்டு சாக்கெட் உள்ளிட்ட பிளாஸ்டிக் மற்றும் உலோக பொருட்கள் இதில் அடங்கும். கைப்பேசி தயாரிப்பில், இந்தியா உலக அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், சீனா, வியட்நாம், மெக்சிகோ நாடுகளுக்கு போட்டியாக, கைப்பேசி ஏற்றுமதியில் முன்னணியில் வருவதற்கு இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதற்கு துணை புரியும் விதமாக இந்த இறக்குமதி வரி குறைப்பு உள்ளது. இதற்கு கைபேசி தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.














