லேப்டாப் டேப்லெட் இறக்குமதிக்கு கட்டுப்பாடு - மத்திய அரசு

August 3, 2023

லேப்டாப், டேப்லெட் போன்ற பொருட்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகம் இது தொடர்பான அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, முறையான உரிமம் மற்றும் அனுமதி பெற்று இருந்தால் மட்டுமே லேப்டாப், டேப்லெட் போன்ற பொருட்களின் இறக்குமதி ஏற்றுக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மின்னணு சாதனங்களின் இறக்குமதியை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது. லேப்டாப், டேப்லெட், ஆல் இன் ஒன் பர்சனல் கம்ப்யூட்டர், அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் […]

லேப்டாப், டேப்லெட் போன்ற பொருட்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகம் இது தொடர்பான அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, முறையான உரிமம் மற்றும் அனுமதி பெற்று இருந்தால் மட்டுமே லேப்டாப், டேப்லெட் போன்ற பொருட்களின் இறக்குமதி ஏற்றுக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மின்னணு சாதனங்களின் இறக்குமதியை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.

லேப்டாப், டேப்லெட், ஆல் இன் ஒன் பர்சனல் கம்ப்யூட்டர், அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் கம்ப்யூட்டர், HSN 8741 சர்வர்கள் ஆகிய பொருட்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், இவை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு வருகை தரும் மற்றும் இந்தியாவிலிருந்து வெளியேறும் பயணிகளின் உடைமைகளை இதன் பொருட்டு சோதனை செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரியர் மூலமாக வர வைக்கப்படும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களுக்கு இந்த விதிகள் செல்லுபடியாகாது. அவற்றுக்கு முறையான இறக்குமதி கட்டணங்கள் செலுத்தி இருந்தால் போதுமானது. மேலும், ஒரு கன்சைன்மெண்ட்டில் 20 பொருட்கள் வரை இறக்குமதி செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu