தனியார் மயமாகும் ஐ டி பி ஐ வங்கி - 60.72% அரசு பங்குகள் விற்பனை

October 8, 2022

இந்தியாவில் அரசால் இயக்கப்பட்டு வரும் ஐ டி பி ஐ வங்கியை தனியார் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இதற்கான முதலீட்டாளர் விண்ணப்பங்களை அரசு வரவேற்றுள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க டிசம்பர் 16ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வசம் உள்ள 60.72% ஐ டி பி ஐ வங்கியின் பங்குகள் விற்கப்பட உள்ளன. ஐ டி பி ஐ வங்கியின் தற்போதைய சந்தை மதிப்பை கருத்தில் கொண்டால், 60.72% பங்குகள் என்பது, சுமார் 27800 கோடி ரூபாய் […]

இந்தியாவில் அரசால் இயக்கப்பட்டு வரும் ஐ டி பி ஐ வங்கியை தனியார் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இதற்கான முதலீட்டாளர் விண்ணப்பங்களை அரசு வரவேற்றுள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க டிசம்பர் 16ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வசம் உள்ள 60.72% ஐ டி பி ஐ வங்கியின் பங்குகள் விற்கப்பட உள்ளன. ஐ டி பி ஐ வங்கியின் தற்போதைய சந்தை மதிப்பை கருத்தில் கொண்டால், 60.72% பங்குகள் என்பது, சுமார் 27800 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், எல்ஐசி மற்றும் இந்திய அரசு ஆகியவை ஐடிபிஐ வங்கியின் முக்கிய பங்குதாரர்களாகவும், முதலீட்டாளர்களாகவும் இருக்கின்றன. எல் ஐ சி நிறுவனம் சுமார் 529.41 கோடி ஐ டி பி ஐ பங்குகளை தன்னகத்தே வைத்துள்ளது. இது வங்கியின் மொத்த பங்கு மதிப்பில், 49.24% ஆகும். மேலும், இந்திய அரசுக்கு, ஐ டி பி ஐ வங்கியில் 488.99 கோடி பங்குகள் உள்ளன. இது வங்கியின் மொத்த பங்கு மதிப்பில் 45.48% ஆகும்.

இந்நிலையில், எல் ஐ சி நிறுவனம், அதனிடம் உள்ள மொத்த பங்குகளில் 30.24% பங்குகளை விற்க உள்ளது. அதே வேளையில், இந்திய அரசு, தன்னிடம் உள்ள பங்குகளில் 30.48 சதவீதத்தை விற்க திட்டமிட்டுள்ளது. இரண்டையும் கூட்டாக சேர்த்து, மொத்தமாக 60.72% பங்குகள் தனியாருக்கு விற்கப்பட உள்ளன. இதனால், ஐடிபிஐ வங்கி தனியார் மயமாக்கப்படுகிறது. அத்துடன், வங்கியின் நிர்வாகப் பொறுப்புகளையும் பரிமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்திய அரசின் முதலீடுகள் மற்றும் பொதுச் சொத்து நிர்வாகத்துறை இந்த வங்கியை நிர்வகித்து வருகிறது. பங்குகள் விற்கப்பட்ட பின்னர். வங்கியின் நிர்வாகப் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu