அக்னிபாத் வீரர்களுக்கு அரசு பணி : 5 மாநில பாஜக முதல்வர்கள் அறிவிப்பு

ஒரே நாளில் ஐந்து மாநில பாஜக முதல்வர்கள் அக்னி வீரர்களுக்கு தங்களது மாநில அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர். நேற்று கார்கில் போரின் 25 ஆவது நினைவு தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மத்திய பாஜக அரசு கொண்டுவந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதாக பாஜக ஆளும் உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய ஐந்து மாநில முதல்வர்கள் […]

ஒரே நாளில் ஐந்து மாநில பாஜக முதல்வர்கள் அக்னி வீரர்களுக்கு தங்களது மாநில அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

நேற்று கார்கில் போரின் 25 ஆவது நினைவு தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மத்திய பாஜக அரசு கொண்டுவந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதாக பாஜக ஆளும் உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய ஐந்து மாநில முதல்வர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி மாநில அரசின் காவல்துறை மற்றும் மாநிலத்தின் ஆயுத காவல் படை பணிகளில் ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு முன்னுரை வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக அரியானாவிலும் பாஜக அரசு மாநிலத்தின் காவல்துறை மற்றும் சிறைத்துறை பணிகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu