ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்களை விற்க அரசு நடவடிக்கை

September 13, 2022

ஏர் இந்தியாவின் நஷ்டம் காரணமாக அதன் துணை நிறுவனங்களின் விற்பனைக்கான பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளது. ஏர் இந்தியாவின் அனைத்து துணை நிறுவனங்களையும் விற்பதற்கு ஏற்கனவே அமைச்சரவை ஒப்புதல் உள்ளது. அதற்காக, பேர்ட் குரூப், செலிபி ஏவியேஷன் மற்றும் ஐ ஸ்கொயர் கேபிடல் உள்ளிட்ட வருங்கால ஏலதாரர்களுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ​​ ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் கீழ் உள்ள 4 துணை நிறுவனங்களான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் […]

ஏர் இந்தியாவின் நஷ்டம் காரணமாக அதன் துணை நிறுவனங்களின் விற்பனைக்கான பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

ஏர் இந்தியாவின் அனைத்து துணை நிறுவனங்களையும் விற்பதற்கு ஏற்கனவே அமைச்சரவை ஒப்புதல் உள்ளது. அதற்காக, பேர்ட் குரூப், செலிபி ஏவியேஷன் மற்றும் ஐ ஸ்கொயர் கேபிடல் உள்ளிட்ட வருங்கால ஏலதாரர்களுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, ​​ ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் கீழ் உள்ள 4 துணை நிறுவனங்களான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (ஏஐஏடிஎஸ்எல்), ஏர்லைன் அல்லைட் சர்வீசஸ் லிமிடெட் (ஏஏஎஸ்எல்) , ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் (ஏஐஇஎஸ்எல்) மற்றும் ஹோட்டல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (எச்சிஐ)  ஆகியவை விற்பனைக்குத் தயாராக உள்ளது. இது குறித்து ௯றிய ஏர் இந்தியாவின் அதிகாரி, துணை நிறுவனங்களை விற்று பணமாக்குவது மற்றும் கடன்களை விரைவில் செலுத்துவது அரசின் திட்டம் எனக் ௯றினார். மேலும் பேர்ட் குரூப், செலிபி ஏவியேஷன் மற்றும் ஐ ஸ்கொயர் கேபிடல் ஆகிய நிறுவனங்கள் ஏஐஏடிஎஸ்எல்-ஐ கைப்பற்ற ஆர்வமாக உள்ளன என்று தெரிவித்தார். நஷ்டத்தை ஏற்படுத்தும் ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலதாரரான பிறகு மத்திய அரசு ஏர் இந்தியாவின் உரிமையை டாடா குழுமத்திற்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu