சென்னையில் குடிநீர் விநியோக லாரிகளில் GPS கண்காணிப்பு: முறைகேடுகள் தடுக்கும் புதிய நடவடிக்கை

சென்னையில் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரில் முறைகேடுகளை தடுக்க GPS கருவி மற்றும் ஸ்மார்ட் அட்டை முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் தினமும் வழங்கப்படும் குடிநீரின் ஒரு பகுதி, லாரிகள் மூலம் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு சென்று சேர்கிறது. ஆனால், இந்த விநியோகத்தில் முறைகேடுகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்ததால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சில லாரி ஓட்டுநர்கள், வழியில் உள்ள தொட்டிகளில் முழு அளவு நீர் விடாமல் மீதமிருக்கும் நீரை வணிக நிறுவனங்களுக்கு விற்பதைப் போன்ற மோசடிகளில் […]

சென்னையில் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரில் முறைகேடுகளை தடுக்க GPS கருவி மற்றும் ஸ்மார்ட் அட்டை முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகரில் தினமும் வழங்கப்படும் குடிநீரின் ஒரு பகுதி, லாரிகள் மூலம் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு சென்று சேர்கிறது. ஆனால், இந்த விநியோகத்தில் முறைகேடுகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்ததால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சில லாரி ஓட்டுநர்கள், வழியில் உள்ள தொட்டிகளில் முழு அளவு நீர் விடாமல் மீதமிருக்கும் நீரை வணிக நிறுவனங்களுக்கு விற்பதைப் போன்ற மோசடிகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதைத் தடுக்க, எல்லா லாரிகளிலும் GPS கருவி மற்றும் சென்சார் பொருத்தப்பட்டு, நீர் எங்கு சென்றது, எப்படி வழங்கப்பட்டது என்பதை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். மேலும் ஒவ்வொரு லாரிக்கும் ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட்டு, முறைகேடு நடந்தால் அபராதம் விதிக்கப்படுவதுடன், பலமுறை மீறினால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu