சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம், அடுத்ததாக ஜிபிடி 4 என்ற பெயரில் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த வாரம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கருதப்படுகிறது. நான்காம் தலைமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக இது அறியப்படுகிறது. இது, மனிதர்களின் கேள்விகளுக்கு வெறும் வார்த்தைகள் மட்டுமல்லாது, காணொளிகள் மூலமாகவும் பதில் அளிக்கும் திறன் கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது
இதுவரை வெளியாகியுள்ள ஜிபிடி 3.5 வெர்ஷனை விடவும், அதிக நவீன வசதிகள் கொண்டதாக ஜிபிடி 4 இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், இதில் வீடியோக்கள் மட்டுமல்லாது, புகைப்படங்கள் மற்றும் ஒலிகள் மூலமாக பதில் அறியும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன், சில கேள்விகளுக்கு உதாரணத்துடன் கூடிய வகையில் பதில் அளிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. உதாரணங்கள் புகைப்படங்களாகவோ, காணொளிகளாகவோ இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.