மத்திய அரசு, மருத்துவப் படிப்பு பட்டமளிப்பு விழாவில் இந்திய பாரம்பரிய உடைகளை அணியலாம் என அறிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம், மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு, பட்டமளிப்பு விழாவுக்கான ஆடையை மாநில பாரம்பரியத்தைப் பின்பற்றக் கோரியுள்ளது. இதுவரை பயன்படுத்தப்படும் கருப்பு நிற ஆடை, ஆங்கிலேயர்கள் காலணியில் அறிமுகப்படுத்தியதாகும். எனவே, இப்போது கருப்பு நிற ஆடைக்கு பதிலாக, இந்திய பாரம்பரிய உடைகளை அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.