ஜம்மு மாநகராட்சியில் கவுன்சிலர் ஆக பட்டப்படிப்பு கட்டாயம்

November 24, 2022

ஜம்மு மாநகராட்சியில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக பட்டப்படிப்பு கட்டாயம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு மாநகராட்சி மேயர் ராஜீந்தர் சர்மா, கவுன்சிலர் பதவியில் போட்டியிடும் பிரதிநிதிகளின் குறைந்தபட்ச கல்வி தகுதியாக பட்டப்படிப்பு கட்டாயமாக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் மாநகராட்சியின் பொது குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மேயர் ராஜீந்தர் சர்மா கூறுகையில், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுவதற்கு பட்டப்படிப்பு கட்டாயம் என்ற விதியை கொண்டு வருவதற்கு முன்பாக, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மற்றும் […]

ஜம்மு மாநகராட்சியில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக பட்டப்படிப்பு கட்டாயம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜம்மு மாநகராட்சி மேயர் ராஜீந்தர் சர்மா, கவுன்சிலர் பதவியில் போட்டியிடும் பிரதிநிதிகளின் குறைந்தபட்ச கல்வி தகுதியாக பட்டப்படிப்பு கட்டாயமாக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் மாநகராட்சியின் பொது குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மேயர் ராஜீந்தர் சர்மா கூறுகையில், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுவதற்கு பட்டப்படிப்பு கட்டாயம் என்ற விதியை கொண்டு வருவதற்கு முன்பாக, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.

மாநகராட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கவனத்தில் கொள்ளுமாறு ஒன்றிய அரசையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். இது போன்ற கவுன்சிலர் கல்வி தகுதி நிர்ணயிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நாட்டிலேயே முதல் முயற்சியாகும் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu